கப்பம் கொடுப்பதை நிறுத்தும் தீர்மானத்திற்கு பாதுகாப்பு பேரவை அங்கீகாரம்

கப்பம் கொடுப்பதை நிறுத்தும் தீர்மானத்திற்கு பாதுகாப்பு பேரவை அங்கீகாரம்

கப்பம் கொடுப்பதை நிறுத்தும் தீர்மானத்திற்கு பாதுகாப்பு பேரவை அங்கீகாரம்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2014 | 1:05 pm

பயங்கரவாத குழுக்களுக்கு நாடுகள் கப்பம் கொடுப்பதை நிறுத்தும் தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாடுகள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் பிரித்தானியாவினால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் பணயக் கைதிகளிடம் இருந்து அல் கைதா இயக்கத்துடன் தொடர்புடைய குழுக்கள் 105 மில்லியன் அமெரிக்க டொலர்களை கப்பமாக பெற்றுள்ளதாக ஐ.நாவிற்கான பிரித்தானிய தூதுவர் கூறியுள்ளார்.

இந்த தீர்மானத்தில் புதிய சட்ட ரீதியான விடயங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு பேரவையில் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்