ஆறு பெண் பிள்ளைகள் அவரைத் தந்தை என்கின்றனர் – அசாத் சாலி

ஆறு பெண் பிள்ளைகள் அவரைத் தந்தை என்கின்றனர் – அசாத் சாலி

ஆறு பெண் பிள்ளைகள் அவரைத் தந்தை என்கின்றனர் – அசாத் சாலி

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2014 | 7:38 pm

அரசாங்கம் பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்திருப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்தார்.

தற்போது அரசாங்கம் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்ற நிலையில், பழைய பல்லவியை பாட ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்த அவர், ஜனாதிபதியை மின்சாரக் கதிரைக்கு கொண்டு செல்லப் போவதாக செயலாளர் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, “யுத்தத்தை நிறைவு செய்த அரசாங்கம் என்றும் எம்மைப் போன்று யாரும் சேவை செய்யவில்லை என்றும் எம்மைப் போல யாரும் சுரண்டவில்லை என்றும் மேலும் திருடுவதற்கு எமக்கு வாக்களியுங்கள் என்றும் கூறுகின்றனர்,” என்றார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது;

“ஜனாதிபதிக்குப் பிறந்த பிள்ளைகளை விட எடுத்து வளர்த்த பிள்ளைகளே அதிகம். ஆறு பெண் பிள்ளைகள் இன்று அவரை எனது  தந்தை என்று கூறுகிறார்கள். தற்போது அவர்கள் தேர்தலுக்கு வந்திருக்கின்றார்கள். புதியவர்கள் வரும்போது இருந்தவர்களுக்கு இடமில்லை.  இவர்களைக் கொண்டாவது வாக்குகளைப் பெற வேண்டும் என்பதே நோக்கமாகும். அந்த அளவுக்கு அரசாங்கம் வங்குரோத்து அடைந்திருக்கின்றது. தற்போது அனைத்தையும் வெற்றிலை எடுத்துச் செல்கின்றது,” என்றார்  தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்