அரசாங்கத்தை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி

அரசாங்கத்தை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2014 | 8:04 pm

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் சில இன்று கொழும்பில் எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்டன.

பல இடங்களில் இருந்து இந்த எதிர்ப்புப் பேரணிகள் ஆரம்பமாகியிருந்தன.

இந்நிலையில், சரத் பொன்சேக்கா தலைமையில் ஜனநாயக் கட்சி ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புப் பேரணி மருதானையிலிருந்து ஆரம்பமானது.

ஊழல், அநீதி, கெசினோ, போதைப்பொருள் மற்றும்  பொருளாதார நெருக்கடி என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஜனநாயகக் கட்சியின் பேரணி தொழில்நுட்பக் கல்லூரி சந்தியின் ஊடாக கோட்டை ரயில் நிலையம் வரை சென்றது.

மேலும் சில பேரணிகள் வெவ்வேறு இடங்களில் ஆரம்பமாகி ஹைட்பார்க் மைதானம் வரை சென்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்