அதிகாரப் பகிர்விற்கு இணங்காதவர்களை தோற்கடித்துள்ளோம் என்கிறார் நாணயக்கார

அதிகாரப் பகிர்விற்கு இணங்காதவர்களை தோற்கடித்துள்ளோம் என்கிறார் நாணயக்கார

அதிகாரப் பகிர்விற்கு இணங்காதவர்களை தோற்கடித்துள்ளோம் என்கிறார் நாணயக்கார

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2014 | 4:22 pm

மாகாண சபைகளிடையே அதிகாரப் பகிர்விற்கு இணங்காதவர்களின் நிலைப்பாடுகளை தோற்கடிக்க முடிந்துள்ளதாக தேசிய கரும மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது;

“மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வேறாக இருப்பதற்கு சிலர் விரும்புவதில்லை. அவர்களது விருப்பமின்மையை நாம் இன்று தோற்கடித்துள்ளோம்.  அவ்வாறான நபர்கள் அரசாங்கத்திற்குள் இருந்தனர். தற்போது அனைவரும் பின்தள்ளப்பட்டு, மாகாண சபைகளுக்கு சென்று,  மாகாண சபைகளுக்கான அதிகாரத்தைக் கோர வேண்டி ஏற்பட்டுள்ளது,” என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்