7000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஐரோப்பியர்களின் தோல் கருமை நிறமானது – ஆய்வு முடிவு

7000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஐரோப்பியர்களின் தோல் கருமை நிறமானது – ஆய்வு முடிவு

7000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஐரோப்பியர்களின் தோல் கருமை நிறமானது – ஆய்வு முடிவு

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 3:54 pm

7000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர்கள் நீல நிற கண்களையும் கரிய தோலினையும் கொண்டவர்களாக இருந்தமை ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

புராதன ஐரோப்பியர்களின் தோற்றம் தொடர்பில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

7000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வேடுவர் ஒருவர் கருமை நிற தோல் மற்றும் சிகையினையும் நீல நிற கண்களையும் கொண்டிருந்தமை மரபணு பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

புராதன ஐரோப்பியர்கள் வெண்மை நிறமாக இருந்தார்கள் என இதுவரை நம்பிய விஞ்ஞானிகள் மத்தியில் இந்த புதிய கண்டுபிடிப்பு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினின் பார்சிலோனோவில் உள்ள பரிணாம உயிரியல் கற்கை நிறுவனத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெண்ணிறமான தோல் ஏற்கனவே நம்பப்பட்ட காலப்பகுதியை விட பிற்பட்ட காலப்பகுதியிலேயே பிரிணாமம் அடைந்திருக்க வேண்டும் என குறித்த கற்கை நிறுவனம் வெளியிடும் ஆய்வு நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு ஸ்பெயினின் வடமேற்கு மலைபகுதியில் இரண்டு வேடுவர்களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த எலும்புகூட்டின் பல் ஒன்றில் இருந்து மரபணுவை பிரித்தெடுத்த விஞ்ஞானிகளால் அதன் மரபணு வரிசையை கணிக்க முடிந்துள்ளது.

புராதன ஐரோப்பியர்கள் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் மக்களுடன் மரபணு ரீதியில் ஒத்துப்போவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த மனிதனின் கண்கள் நீல நிறமாக இருந்துள்ள அதேவேளை அவனது கேசம் கறுப்பு அல்லது மண்ணிறமாகவும் தோல் கருமை நிறமாகவும் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவு எதிர்பார்க்கப்படாத ஒன்று என ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

45000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்க கண்டத்தில் இருந்து ஐரோப்பிய கண்டத்திற்கு புலம் பெயர்ந்த போது ஐரோப்பியர்களின் தோல் வெண்ணிறமாக மாறியதாக விஞஞானிகள் இது வரை நம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ts_LaBrana1_skull_free


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்