மன்னார் மனித புதைகுழியில் மீண்டும் அகழ்வு; இன்றும் 3 மண்டையோடுகள் மீட்பு

மன்னார் மனித புதைகுழியில் மீண்டும் அகழ்வு; இன்றும் 3 மண்டையோடுகள் மீட்பு

மன்னார் மனித புதைகுழியில் மீண்டும் அகழ்வு; இன்றும் 3 மண்டையோடுகள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 6:01 pm

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இன்று மூன்று மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று மீட்கப்பட்டுள்ள மண்டையோடுகளுடன் மொத்தமாக இதுவரை  47 மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியிலுள்ள மனித புதைகுழியில் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் மாலை வரை இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட நீதவான் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம்பெற்றன.

திருக்கேதீஸ்வரம் ஆலயம் மாந்தை வீதியினூடாக குடிநீர் வழங்குவதற்காக நீர் குழாய்கள் பதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கடந்த வருடம் டிசம்பர் 20 ஆம் திகதி இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது 47 மண்டையோடுகள், எலும்புக்கூடுகள் உள்ளிட்ட எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அகழ்வில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மன்னார் வைத்தியசாலையின் பிரத்தியேக அறையொன்றில் வைத்து, அதன் பொறுப்பை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு நீதவானினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்