புதிய அரசியல் அமைப்புக்கு ரியுனீசிய பாராளுமன்றத்தின் அங்கீகாரம்

புதிய அரசியல் அமைப்புக்கு ரியுனீசிய பாராளுமன்றத்தின் அங்கீகாரம்

புதிய அரசியல் அமைப்புக்கு ரியுனீசிய பாராளுமன்றத்தின் அங்கீகாரம்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 11:21 am

ரியூனிசிய பாராளுமன்றம் புதிய அரசியலமைப்புக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது

மூன்று வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி பென் அலி மக்கள் புரட்சி மூலம் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் முதல் முறையாக புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டில் ஸ்தீரத்தன்மை ஏற்பட்டுள்ளமைக்கான ஒரு சமிக்ஙையாக இந்த அரசியலமைப்பு அங்கீகாரம் அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே புதிய இடைகால அரசாங்கம் ஒன்றை தாம் அமைந்துள்ளதாக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மெஹ்டி ஜெமா தெரிவித்துள்ளார்..

புதிய தேர்தல்கள் நடத்தப்படும் வரை இந்த இடைக்கால அரசாங்கம் ஆட்சி நடத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இதுவரை திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்