பலாங்கொடையில் பாடசாலை அதிபர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பலாங்கொடையில் பாடசாலை அதிபர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பலாங்கொடையில் பாடசாலை அதிபர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 9:07 pm

பலாங்கொடை பகுதியிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் கற்கும்  மாணவர்களின் பெற்றோர்களினால் இன்று ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாடசாலையின் அதிபரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பலாங்கொடை – இராசகல பிரதான வீதியை மறித்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பில் பலாங்கொடை கல்வி வலயத்தின் உயரதிகாரியிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தமக்கு உரியமுறையில் அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்