பனிச்சையடி கடலில் மூழ்கிய இளைஞர்களை தேடும் பணி தொடர்கிறது

பனிச்சையடி கடலில் மூழ்கிய இளைஞர்களை தேடும் பணி தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 8:25 pm

மட்டக்களப்பு, பனிச்சையடி கடலில் மூழ்கி காணாமற்போன மூன்று இளைஞர்களை தேடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன

பனிச்சையடி கடலில் நீராடச்சென்ற 07 பேரில் மூவர் நேற்று மாலை காணாமற்போயுள்ளனர்.

19, 20 மற்றும் 23 வயதான மூன்று இளைஞர்களே நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படையினரும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்