பங்களாதேஷ் அணியை குறைத்து மதிப்பிட முடியாது – மெத்யூஸ்

பங்களாதேஷ் அணியை குறைத்து மதிப்பிட முடியாது – மெத்யூஸ்

பங்களாதேஷ் அணியை குறைத்து மதிப்பிட முடியாது – மெத்யூஸ்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 8:16 am

பங்களாதேஷ் அணியை குறைத்து மதிப்பிட முடியாது என இலங்கை அணித் தலைவர் எஞ்சலோ மெத்யூஸ் குறிப்பிடுகின்றார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இலங்கை அணித் தலைவர் எஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்த கருத்து :-

“இந்தப்போட்டி நிச்சியமாக சவால்மிக்கதாக அமையும். காரணம் பங்ளாதேஷ் அணி கடந்த சில வருடங்களாக சிறப்பாக விளையாடிவருகின்றது. குறிப்பாக பங்ளாதேஷை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளுவது சவால்மிக்கதாகும். அவர்கள் சிறந்த முறையில் விளையாடுவார்கள், எனவே பங்களாதேஷை வெற்றிகொள்வதாயின் சிறப்பான முறையில் விளையாட வேண்டும்.  ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்ற இறுதி டெஸ்ட் போட்டியின் இறுதி இரண்டு இன்னிங்ஸ்களைத் தவிர அதற்கு முன்னைய போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டுள்ளோம்.எமது அனைத்து வீரர்களும் சிறந்த மனோநிலையில் உள்ளர், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பிரகாசித்து வருகின்றனர். ஐக்கிய இராஜ்ஜியத்தில் விளையாடியது போன்று இந்த தொடரிலும் சிறப்பாக செயற்படுவோம் என நம்புகிறோம். பங்களாதேஷ் அணியை குறைத்து மதிப்பிடமுடியாது. பங்களாதேஷ் அணி சொந்த மண்ணில் சிறந்த அணியாக உள்ளது. எனவே பங்களாதேஷ் அணியை வெற்றிகொள்ள சிறந்த முறையில் விளையாட வேண்டிய தேவையுள்ளது”

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிகெட் போட்டி டாக்காவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற 14 டெஸ்ட் போட்டிகளில், 13 இல், இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இதேவேளை இந்த தொடரில் வெற்றிப்பெறும் இலக்குடனே தாம் களமிறங்கவுள்ளதாக பங்ளாதேஷ் அணி தலைவர் முஷ்பிஹூர் ரஹீம் குறிப்பிடுகின்றார்.

இறுதியாக இலங்கை அணியுடன் இடம்பெற்ற போட்டிகளில் தோல்வியடைந்திருப்பினும், தாம் சிறந்த முறையில் விளையாடியதாக முஸ்பிகூர் ரஹிம் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்