நூல் இழையில் உயிர் தப்பிய பாட்டியும் பேரனும் – அதிர்ச்சி காணொளி

நூல் இழையில் உயிர் தப்பிய பாட்டியும் பேரனும் – அதிர்ச்சி காணொளி

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 1:30 pm

பிரேஸிலைச் சேர்ந்த பாட்டி ஒருவரும் அவரது 5 வயது பேரனும் விபத்து ஒன்றில்  நூலிழையில் உயிர்தப்பிய காணொளி அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் வெளியாகியதை தொடர்ந்து அவர்கள் இருவரும் பிரபல்யம் அடைந்துள்ளனர்.

இந்த பயங்கர விபத்தில் தெய்வாதீனமாக இருவரும் பாரிய காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வியில் இந்த பயங்கர சம்பவம் பதிவாகியுள்ளது.

வேகமாக வந்த வாகனமொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் மோதியதனால் அந்த கார் வீதியில் நடந்து சென்ற பாட்டியையும் பேரனையும் மோதியுள்ளது.

எனினும் அவர்கள் இருவரும் பாரதூரமான காயங்கள் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்