நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு மேற்குலக சக்திகள் முயற்சிக்கின்றன – பிரேமஜயந்த

நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு மேற்குலக சக்திகள் முயற்சிக்கின்றன – பிரேமஜயந்த

நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு மேற்குலக சக்திகள் முயற்சிக்கின்றன – பிரேமஜயந்த

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 1:22 pm

இலங்கை மக்களின் ஒற்றுமையை சீர்குழைப்பதே மேற்குலக நாடுகளின் தேவையாகவுள்ளது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிகின்றார்.

அதுருகிரியவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கடுவெல பிரதிநிதிகள் மாநாட்டின் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

சுசில் பிரேமஜயந்த தெரிவித்த கருத்து :-

“எம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். மனிதாபிமான நடவடிக்கையின் போது ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள் என குற்றஞ்சாட்டுகின்றனர். எமக்கு ஆலோசனை வழங்கும் மேற்குலக நாடுகள் ஆட்சி நிலவிய பகுதிகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தால் சரணடைந்த 12 ஆயிரம் பேரின் தலைமுடி கூட எஞ்சியிருக்காது. இந்த 12 ஆயிரம் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களும் சாதாரண மக்கள் இல்லை. அவர்கள் மீது ஏன் வழக்கு தாக்கல் செய்யவில்லை என தற்போது கேட்கின்றனர். எமது மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர். அந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே எமது நாட்டின் எதிர்க்கட்சியினர் தற்போது செயற்படுகின்றனர்”

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவங்சவும் அங்கு உரையாற்றினார்.

விமல் வீரவங்ச தெரிவித்த கருத்து :-

“மேற்கொள்வதற்கான தாக்குதல் ஒன்று இல்லை. நாட்டை பிளவுபடுத்தும் அரசாங்கம் என அவர்களால் கூற முடியாது.நாட்டை விற்கும் அரசாங்கம் என கூற முடியாது. நாட்டை தாரைவார்க்கும் அரசாங்கம் என கூற முடியாது. நாட்டை சீர்குலைக்கும் அரசாங்கம் என கூற முடியாது. ஒன்றையுமே
கூறாமல் இருக்க முடியாது என்பதற்காக ஒழுக்கம் இல்லைஎன கூறுகின்றனர். அனைத்து சந்தர்ப்பங்களிலும் போதைப்பொருள் குறித்து பேசுகின்றனர். தொடர்ச்சியாக இத்தகைய கருத்துக்கள் வெளியிடப்படுகின்ற போது, நாடுமுழுவதும் போதைப்பொருளால் நிரம்பியுள்ளது என்ற எண்ணம் ஏற்படுகின்றது. ஏனைய நாட்களை விட அதிகளவு போதைப்பொருள் தற்போது
கைப்பற்றப்படுகின்றது.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்