நாட்டில் தேவையற்ற விதத்தில் பலர் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றனர் – ஜனாதிபதி

நாட்டில் தேவையற்ற விதத்தில் பலர் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றனர் – ஜனாதிபதி

நாட்டில் தேவையற்ற விதத்தில் பலர் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றனர் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 8:52 pm

யுத்தம் நிறைவடைந்து, குறுகிய காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளில் முன்னேற்றம் உள்ள நிலையில், அவற்றை கவனத்திற்கொள்ளாது, நாட்டில் தேவையற்ற விதத்தில் பலர் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவருக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு அலரிமாளிகையில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

நாட்டில் காணக்கூடிய அபிவிருத்தியின் முன்னேற்றத்தை வரவேற்பதாக உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்காக உப தலைவர் பிலிப் லே, ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகள் நிர்மாணிக்கப்படுகின்றமை மற்றும் அதன் தரத்தையும் பிலிப் லே, பாராட்டியதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையுடன் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்பட உலக வங்கி தயார் என வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் உறுதி வழங்கியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்