சிதம்பரபுரத்தில் புதையல் அகழ்ந்தவர்கள் கைது; பூஜைப் பொருட்களும் மீட்பு

சிதம்பரபுரத்தில் புதையல் அகழ்ந்தவர்கள் கைது; பூஜைப் பொருட்களும் மீட்பு

சிதம்பரபுரத்தில் புதையல் அகழ்ந்தவர்கள் கைது; பூஜைப் பொருட்களும் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 6:11 pm

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியிலுள்ள புராதன குளமொன்றுக்கு அருகில் புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமக்கு கிடைத்த தகவலொன்று அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து பூஜைப் பொருட்கள் சிலவும், மோட்டார் சைக்கிளொன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான இருவரும் மருதன்குளம் மற்றும் விநாயகபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்