”சக்தி சங்கமம்” நான்காம் நாள் இன்று

”சக்தி சங்கமம்” நான்காம் நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 9:37 pm

தமிழ் மொழிக்கும் அதன் பாரம்பரிய கலைகளுக்கும் புத்துயிர் அளிக்கும் வகையில் சக்தி எப். எம். ஏற்பாடு செய்துள்ள சக்தி சங்கமத்தின் நான்காம் நாள் இன்றாகும்.

இன்றைய நான்காம் நாள் கலை நிகழ்வுகள் யாழ். திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்றன.

இளம் சமுகத்தினர் மத்தியில் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் தொடர்பில் அறிவூட்ட வேண்டும் என்ற எண்ணத்துடனும், அந்தப் பாரம்பரியக் கலைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சக்தி சங்கமம் இலங்கையின் வட பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த 24ஆம் திகதி ஆரம்பமான சக்தி சங்கமம் வட மாகாணத்தில் அமைந்துள்ள பத்து நகரங்களில் இடம்பெறுகின்றது.

இதன்படி, தமிழர்களுக்கே உரித்தான பாரம்பரிய கலை வடிவங்களை வெளிப்படுத்தும் சக்தி சங்கமம், வீதித் திருவிழாவாக யாழ்ப்பாணம், மானிப்பாய், நெல்லியடி, திருநெல்வேலி, சுன்னாகம், சங்கானை,ஊர்காவற்துறை, சாவகச்சேரி, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நகரங்களில் இடம்பெறுகின்றது.

இதற்கமைய, சக்தி சங்கமம் நெல்லியடி பகுதியில் நேற்றைய தினம் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு வட மாகாணத்திலிருந்து பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.

பாரம்பரிய கலைகளின் காவலர்களாக விளங்கும் இவ்வாறான கலைஞர்களின் திறமைகள் மேடையேற்றப்படுவது தமக்கு கிடைத்த சிறந்த சந்தர்ப்பம் என கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சக்தி சங்கமத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் திருவெல்வேலி பகுதியில் இன்று மிக சிறப்பாக நடாத்தப்பட்டன.

பொய்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், காவடி,மயிலாட்டம் உள்ளிட்ட  பல பாரம்பரிய கலை வடிவங்கள் இடம்பெறும் சக்தி சங்கமத்தின் 4 ஆம் நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

சக்தி சங்கமத்தின் ஐந்தாம் நாள் கலை நிகழ்வுகள் நாளை சுன்னாகம் பகுதியில் இடம்பெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்