காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளுக்கு கிளிநொச்சியில் காரியாலயம்

காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளுக்கு கிளிநொச்சியில் காரியாலயம்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 8:59 pm

காணாமற்போன மற்றும் உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள் ஒன்றியத்தின் கிளிநொச்சி காரியாலயம், கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

வட மாகாணத்தில், யுத்தத்தில் அல்லது வேறு சந்தர்ப்பங்களில் காணாமற்போனோரின் முறைப்பாடுகளை இங்கு பதிவுசெய்யமுடியும்.

இதனூடாக காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்களை நேரடியாக ஜனாதிபதியின் கவனத்திற்குகொண்டு காணாமற்போன மற்றும் உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள் ஒன்றியம் தெரிவிக்கின்றது.

இன்றைய முதல் நாளிலேயே 150க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக ஒன்றியம் தெரிவிக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்