இலங்கை, தமிழக மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு

இலங்கை, தமிழக மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு

இலங்கை, தமிழக மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 8:08 pm

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும், இலங்கை மற்றும் தமிழக மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.

இருதரப்பினதும் யோசனைகளை இலங்கை, இந்திய அரசாங்கங்களிடம்  சமர்ப்பித்ததன் பின்னர், இந்தப் பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதாக சென்னைக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் சபருல்லா கான் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அடுத்த மாதம் அல்லது மார்ச் மாதமளவில் இந்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் இடம்பெறலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை பணிப்பாளர் அலுவலகத்தில் இன்றைய பேச்சுவார்த்தைகள் முற்பகல் 10 மணிமுதல் மாலைவரை இடம்பெற்றன.

இதில் தமிழக அரசின் கடற்றொழில் அமைச்சர் கே.ஏ.ஜெயபால், இலங்கை கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி மற்றும் இருநாட்டு மீனவர்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் உரிய தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாத நிலையில், அடுத்தமாதம் கொழும்பில் நடைபெறவுள்ள மற்றுமொரு பேச்சுவார்த்தையில் இறுதி தீர்மானம் எட்டப்படலாம் என இலங்கை இந்திய மீனவ சங்கத் தலைவர் நா.தேவதாஸ் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை – தமிழக மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சின் ஊடக செயலாளர் நரேந்திர ராஜபக்ஸ தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இந்திய மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அனுமதி கோரியபோதிலும், அதற்கு இலங்கை மீனவர்கள் மறுப்பு தெரிவித்ததாக அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்