இலங்கை சிறப்பான ஆரம்பம்

இலங்கை சிறப்பான ஆரம்பம்

இலங்கை சிறப்பான ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 4:50 pm

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை இன்றைய முதல்நாள் ஆட்டநேர நிறைவில் விக்கெட் இழப்பின்றி 60 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய திமுத் கருணாரத்ன 28 ஓட்டங்களையும், கௌஷால் சில்வா 30 ஓட்டங்களையும் பெற்ற ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதேவேளை, பங்களாதேஷ் அணி 232 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

மிர்பூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை, பங்களாதேஷ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

பங்களாதேஷ் சார்பில் ஷகிப் அல் ஹசன் 55 ஓட்டங்களையும், முஸ்பீகூர் ரஹீம் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சமிந்த எரங்க 4 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மல் விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்