வெளிநாட்டு சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் கைது

வெளிநாட்டு சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் கைது

வெளிநாட்டு சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் கைது

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 9:18 pm

காலி, ரூமஸ்சல கடற்கரை பகுதியில் 09 வயதான வெளிநாட்டுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அந்தச் சிறுமி தனது பெற்றோருடன் கடற்கரையில் இருந்த சந்தர்ப்பத்தில், குறித்த இளைஞனால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காலியைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஹிக்கடுவ பகுதியில் வெளிநாட்டு யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபரை தேடி பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த யுவதி ஹிக்கடுவ தீவுக்கு சென்று, திரும்பிக்கொண்டிருந்தபோது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

20 வயதான யுவதியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்