மன்னார் மனித புதைகுழி தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை கோரும் ஜே.வி.வி

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை கோரும் ஜே.வி.வி

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 9:21 pm

மன்னார், மனித புதைகுழி தொடர்பாக பக்கசார்பற்ற, நியாயமான விசாரணைகளை முன்னெடுத்து, உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் செயற்படுமாறு மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்புகளினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு உரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பது தற்போது  அத்தியாவசியமான விடயமாகியுள்ளதாக அந்தக் கட்சியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியில் மண்டையோடுகள் மற்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமையானது, மாத்த​ளை மனித புதைகுழியிலிருந்து மீ்ட்கப்பட்ட 150 மனித எச்சங்களை போன்று மனித படுகொலை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.

தெற்காக இருப்பினும், வடக்காக இருப்பினும், அங்கு புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும், இந்த மனித புதைகுழி மனிதாபிமானமற்ற மனித படுகொலைகளின் வெளிப்பாடாக இருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒருவருக்கு ஒருவர் குற்றஞ்சாட்டாது, உரியவகையில் விசாரணைகளை முன்னெடுத்து, அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுப்பதே தற்போதைய தேவை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்