பொல்கஹவெல மாஒயாவில் மூன்று மண்டையோடுகள் மீட்பு

பொல்கஹவெல மாஒயாவில் மூன்று மண்டையோடுகள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 2:25 pm

பொல்கஹவெல மாஒயாவில் இருந்து 3 மண்டையோடுகளும் மனித எச்சங்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

இன்று காலை மீட்கப்பட்ட இந்த மனித எச்சங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மண்டையோடுகள் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,

மாஒயாவின் நீர்மட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ள நிலையில் மண்னுக்குள் இருந்து குறித்த மண்டை ஓடுகளும் எச்சங்களும் வெளிப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நீதவான் விசாரணைகள் இன்று நடைபெற்றதன் பின்னர் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்