துணைவியை பிரிந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி

துணைவியை பிரிந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி

துணைவியை பிரிந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 12:03 pm

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்டே தொடர்பான தகவல் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது துணைவியார் வெலரி ட்ரியவீலரை  பிரிந்து செல்வது தொடர்பாக வெளிவந்த தகவலை  ஹொலண்டே உறுதிப்படுத்தியுள்ளார்.

வெலரியுடன் பகிர்நது கொள்ளப்பட்ட வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளதாக பிரான்சுவா ஹொலண்டே ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் ஜனாதிபதி , நடிகை ஜூலி கையட்டுடன் இரண்டு வருடங்களாக தொடர்பை பேணி வந்ததாக தகவல்கள் வெளிவந்தன.

இதனை அடுத்து வெலரி ட்ரியவீலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரான்ஸ் ஜனாதிபதி , முதற்பெண்மணியை பிரிந்து செல்வதாக பிரான்ஸ் சஞ்சிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதனை அரசாங்கம் மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்