”சக்தி சங்கமம்” மூன்றாவது நாள் இன்று

”சக்தி சங்கமம்” மூன்றாவது நாள் இன்று

”சக்தி சங்கமம்” மூன்றாவது நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 8:39 pm

தமிழ் மொழிக்கும் அதன் பாரம்பரிய கலைகளுக்கும் புத்துயிர் அளிக்கும் வகையில் சக்தி எப்.எம். ஏற்பாடு செய்துள்ள சக்தி சங்கமத்தின் மூன்றாவது நாள் இன்றாகும்.

24 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் ஆரம்பமான சக்தி சங்கமம், பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இளம் சமூகத்தினர் மத்தியில் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் தொடர்பில் அறிவூட்ட வேண்டும் என்ற எண்ணத்துடனும், அந்தப் பாரம்பரியக் கலைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சக்தி சங்கமம் இலங்கையின் வட பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

திருநெல்வேலி நகரில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சக்தி சங்கமத்தின் மூன்றாம் நாளுக்குரிய நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நேற்று முன்தினம் ஆரம்பமான சக்தி சங்கமம் வட மாகாணத்தில் அமைந்துள்ள பத்து நகரங்களில் இடம்பெறவுள்ளன.

தமிழர்களுக்கே உரித்தான பாரம்பரிய கலை வடிவங்களை வெளிப்படுத்தும் சக்தி சங்கமம், வீதித் திருவிழா திருநெல்வேலி, சுன்னாகம், சங்கானை, ஊர்காவற்துறை, சாவகச்சேரி, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நகரங்களில் தொடர்ந்து இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்