குடியிருப்பில் தீ பரவியதால் இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிக முகாமில்

குடியிருப்பில் தீ பரவியதால் இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிக முகாமில்

குடியிருப்பில் தீ பரவியதால் இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிக முகாமில்

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 7:44 pm

நுவரெலியா, இறம்பொடை தோட்டத்தில் குடியிருப்புத் தொகுதியொன்றில் தீ பரவியதால், இடம்பெயர்ந்த 28 குடும்பங்கள் இன்று மாலை தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

அவர்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் தொடர்ந்தும் வழங்கப்பட்டுவருவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜி குமாரசிறி குறிப்பிட்டார்.

இறம்பொடை புளூபீல்ட் தோட்டத்தில் நேற்று பகல் பரவிய தீயினால் 16 தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் முற்றாக சேதடைந்ததுடன் மேலும் பல குடியிருப்புக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது.

கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்