காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட குழு

காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட குழு

காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட குழு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 9:21 am

காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நீதிமன்ற அதிகாரங்களுடன் கூடிய குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது

காணிப் பிரச்சினைகளை தீர்த்து அவற்றுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மேலதிக நில அளவையாளர் நாயகம் பீ.எம்.பீ.உதயகாந்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நில அளவைகள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது

காணிப் பிரச்சினை தொடர்பில் ஆரய்வதற்காக ஜனாதிபதி நியமித்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதற்கமைய புதிய சட்டமூலத்தை தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக மேலதிக அளவையாளர் நாயகம் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் காணிகளுக்கான உரிமைப் பத்திரம் மற்றும் உறுதிப்பத்திரம் ஆகியவற்றை பதிவு செய்வதற்கும் உத்தேசித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்