கல்வியற் கல்லூரி அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

கல்வியற் கல்லூரி அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

கல்வியற் கல்லூரி அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 2:23 pm

கல்வியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விண்ணப்பம் கோருவதற்கான வர்த்தமானி இம்மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

கல்வியற் கல்லூரிகளுக்கு இம்முறை மூவாயிரத்து 500 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 18 கல்வியற் கல்லூரிகளில் ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடநெறிகளுக்காக இவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

2012 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களிடம் இருந்தே விண்ணப்பம் கோரப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்