கமல், வைரமுத்துவிற்கு பத்ம பூஷன் விருது

கமல், வைரமுத்துவிற்கு பத்ம பூஷன் விருது

கமல், வைரமுத்துவிற்கு பத்ம பூஷன் விருது

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 5:28 pm

திரையுலக ஜாம்பவான்களான நடிகர் கமல்ஹாசன் மற்றும் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு பத்ம பூஷன் அறிவிக்கபட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இதில் தமிழ்த்திரையுலகைச் சேர்ந்த நடிகர் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை 127 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸூக்கு பத்ம விபூஷன் விருதினை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை ஹிந்தி நடிகை வித்யா பாலன் மற்றும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லேகல்லுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்