கட்டுநாயக்க துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் பலி

கட்டுநாயக்க துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் பலி

கட்டுநாயக்க துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 1:13 pm

கட்டுநாயக்க பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் 10 மணியளவில் இனந்தெரியாத ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் போச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

குற்றச் செயலொன்று தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணை வழங்கப்பட்டிருந்த ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை பொலிஸ் குழுக்கள் மேற்கொண்டுவருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்