எகிப்து மோதலில் உயிரிழப்பு 49ஆக உயர்வு

எகிப்து மோதலில் உயிரிழப்பு 49ஆக உயர்வு

எகிப்து மோதலில் உயிரிழப்பு 49ஆக உயர்வு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 8:09 pm

எகிப்தில் இடம்பெற்ற மோதல்களால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்வடைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஹொஷ்னி முபாரக்கிற்கு எதிரான மக்கள் புரட்சி ஏற்பட்டதன் மூன்றாவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட பேரணியில் இந்த மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

எகிப்தின் இராணுவத்தரப்புக்கு ஆதரவான குழுவினர்க்கும் எதிரான குழுவினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எகிப்தில் தற்போது பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முஹமட் முர்சி தடுத்துவைக்கப்பட்ட நிலையில் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துவருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்