இளைஞரின் முறைப்பாட்டை அடுத்து மங்களவிடம் வாக்கமூலம் பதிவு

இளைஞரின் முறைப்பாட்டை அடுத்து மங்களவிடம் வாக்கமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 9:07 pm

இரத்மலானை பகுதியிலுள்ள இளைஞன் ஒருவர் பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மங்கள சமரவீரவின் வீட்டிற்குள் நுழைந்து, அவரது பொருட்களை கொள்ளையிட்டதாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், கடந்த 31ஆம் திகதி குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அதனையடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்ட குறித்த இளைஞன், தன்னை போலியான குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்ததாக தெரிவித்து, மங்கள சமரவீரவிற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவப்பட்டபோது, சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்