இலங்கையின் வறுமை நிலையில் வீழ்ச்சி

இலங்கையின் வறுமை நிலையில் வீழ்ச்சி

இலங்கையின் வறுமை நிலையில் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 8:52 am

இலங்கையின் வறுமை நிலை 6.5 வீதம் வரை குறைவடைந்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வொன்றின்போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2012 ஆம் 2013 ஆம் ஆண்டுகளின் வருமானம் மற்றும் செலவீனங்கள் தொடர்பில் இதன்போது கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக நலன்புரி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமையே நாட்டின் வறுமை நிலை குறைவடையக் காரணம் என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி.சி.ஏ.குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

2010 ஆம் 2011 ஆம் ஆண்டுகளில் நாட்டின் வறுமை நிலை 8.9 வீதமாக காணப்பட்டமைமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்