மூன்றாவது போட்டி சமநிலையில் நிறைவு

மூன்றாவது போட்டி சமநிலையில் நிறைவு

மூன்றாவது போட்டி சமநிலையில் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2014 | 8:20 pm

இந்திய,  நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி  சமநிலையில் முடிவடைந்தது.

ஒக்லேண்டில் நடைபெற்ற இந்த போட்டியில் 315 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்றது.

ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் பெற்ற 66 ஓட்டங்களைப் பெற்று இந்திய அணியை  தோல்வியில் இருந்து மீட்டெத்துள்ளார்.

பந்துவீச்சில் நியூஸிலாந்து சார்பில் கொரி என்டர்ஸன் 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

முதலாவதாக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 314 ஓட்டங்களை பெற்றது.

மார்டின் குப்டில் 111 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

முதலிரண்டு  போட்டிகளையும் ஏற்கனவே நியூஸிலாந்து அணி வெற்றிக்கொண்ட நிலையில், தொடரை சமப்படுத்த வேண்டுமாயின் மீதமுள்ள போட்டிகளை இந்தியா வெற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்