I.C.C புதிய நிர்வாக வியூகம்; இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதில் யாது?

I.C.C புதிய நிர்வாக வியூகம்; இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதில் யாது?

I.C.C புதிய நிர்வாக வியூகம்; இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதில் யாது?

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 12:17 pm

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிர்வாக வியூகம் தொடர்பான சட்டமூலத்துக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளிப்படுத்தும் பதில் யாது?

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தேச நிர்வாக வியூக சட்டமூலம் அதன் நிறைவேற்றுக் குழுவிடம்
எதிர்வரும் 28 ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது.

அந்த சட்டமூலத்துக்கு அமைவாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் குழுவில் இந்தியா, இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மாத்திரம் நிரந்தர அங்கத்துவம் கிடைக்கவுள்ளது.

பேரவையின் வர்த்தக மற்றும் நிதி திட்டமிடல் குழு தயாரித்த சட்டமூலம் ஆய்வுக்காக கடந்த 9 ஆம் திகதி கிரிக்கெட் நிர்வாக சபைகளுக்கு வழங்கப்பட்டது.

குறித்த சட்டமூலம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழு இன்று பிற்பகல் அவசமாகக் கூடியது.

சுமார் 4 மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்ற நிர்வாகக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் யாதென அதன் பொருளாளர் நுஸ்கி மொஹமட்டிடம் ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் வினவியது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமது குழு தீர்மானித்ததென அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அந்த சட்டமூலம் தொடர்பாக கலந்துரையாட நிறைவேற்றுக்குழு தயாராக உள்ளதென பொருளாளர் தெரிவித்தார்.

சட்டமூலத்தை ஆராய போதிய காலஅவகாசத்தை கோர நிறைவேற்றுக்குழு தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிறைவேற்றுக்குழு இன்று எடுத்த தீர்மானத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு எழுத்துமூலம் அறிவிக்க உள்ளதாகவும் பொருளாளர் நுஸ்கி மொஹமட் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சட்டமூலம் தொடர்பில் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் சம்பந்தமாக நிறைவேற்றுக் குழுவில் அமைதியின்மை ஏற்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்தக் கடிதத்தை அனுப்பிய நிறைவேற்று அதிகாரிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றுக்குழுக்கு சமர்ப்பிக்கப்படாதபோதிலும் அது குறித்து எவரும் பதில் அளிக்கவில்லை என்று அந்த உயர் அதிகாரி குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்