வன்புணர்விற்கு உத்தரவிட்ட பஞ்சாயத்து; இந்திய உச்சநீதிமன்றம் விசாரணை

வன்புணர்விற்கு உத்தரவிட்ட பஞ்சாயத்து; இந்திய உச்சநீதிமன்றம் விசாரணை

வன்புணர்விற்கு உத்தரவிட்ட பஞ்சாயத்து; இந்திய உச்சநீதிமன்றம் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 12:31 pm

மேற்கு வங்கத்தில் பழங்குடியின இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றம் தானாகவே முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, மேற்கு வங்க மாநிலத்திற்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள லாப்பூர் என்ற கிராமத்தில், வேறு ஜாதி இளைஞர் ஒருவரை காதலித்த, பழங்குடியின இளம் பெண்ணை தண்டனை என்ற பெயரில் கிராம பஞ்சாயத்து தலைவர் உட்பட, 13 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர் உள்பட 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றம், இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் பிர்பும் மாவட்ட நீதிபதி சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு ஒரு வார காலத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்