றொஹிங்கா முஸ்லிம்கள் படுகொலை; மறுப்புத் தெரிவித்துள்ளது பர்மிய அரசு

றொஹிங்கா முஸ்லிம்கள் படுகொலை; மறுப்புத் தெரிவித்துள்ளது பர்மிய அரசு

றொஹிங்கா முஸ்லிம்கள் படுகொலை; மறுப்புத் தெரிவித்துள்ளது பர்மிய அரசு

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2014 | 4:21 pm

பர்மாவின் தூர மேற்குப் பகுதியில் கடந்த வாரம் நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் 30 றொஹிங்கா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை அந்நாட்டு அரசாங்கம் மறுத்துள்ளது.

மனிதப் படுகொலை எதுவும் நடக்கவில்லை என்றும், அந்தச் செய்திகளுக்கு ஆதாரம் எதுவும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ள பர்மா, தன் நாட்டின் பெயரைக் கெடுக்கும் நோக்கில் அவ்வாறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஒரு பொலிஸ்காரர் இறந்த சம்பவத்தை அடுத்து ரக்கைன் மாநிலத்தில், றொஹிங்கா முஸ்லிம்களை பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் பௌத்தர்களும் தாக்கியதாக சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பி.பி.சி செய்தி சேவைக்குத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஐ.நா, அங்குள்ள தனது அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்