ரயில் பெட்டிகள் திடீரெனக் கழன்றன; விசாரணைகள் ஆரம்பம்

ரயில் பெட்டிகள் திடீரெனக் கழன்றன; விசாரணைகள் ஆரம்பம்

ரயில் பெட்டிகள் திடீரெனக் கழன்றன; விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 6:06 pm

புத்தளத்தில் இன்று காலை   கொழும்பை நோக்கி பயணித ரயில் ஒன்றின் 2 பெட்டிகள் சிலாபத்திற்கும் மாதம்பைக்கும் இடையிலான பகுதியில் திடீரெனக் கழன்ற சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பங்கதெனிய அலுவலக ரயிலின் கடைசி 2 பெட்டிகளே இன்று காலை  6.30 அளவில் கழன்றதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

பின்னர் 2 பெட்டிகளும் இணைக்கப்பட்டு ரயில் கொழும்பை நோக்கி பயணத்தை தொடர்ந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்