மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது

மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது

மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 2:46 pm

பொகவந்தலாவை பிரதேச பாடசாலையொன்றில் மாணவனை தாக்கி காயப்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தரம் ஐந்தில் கல்விகற்கும் மாணவனே ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கணிதபாட ஆசிரியரை இன்று கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான ஆசிரியர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்