மாணவனை தாக்கிய ஆசிரியருக்குப் பிணை

மாணவனை தாக்கிய ஆசிரியருக்குப் பிணை

மாணவனை தாக்கிய ஆசிரியருக்குப் பிணை

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 7:57 pm

பொகவந்தலாவை பிரதேச பாடசாலை ஒன்றில் மாணவனை தாக்கி காயப்படுத்திய ஆசிரியர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர்  ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த பாடசாலையின் பாலர் பிரிவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே  இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே ஆசிரியரால் தாக்கப்பட்டு பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்