மன்னார் மனித புதைகுழி; மீட்கப்பட்ட எச்சங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு உத்தரவு

மன்னார் மனித புதைகுழி; மீட்கப்பட்ட எச்சங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு உத்தரவு

மன்னார் மனித புதைகுழி; மீட்கப்பட்ட எச்சங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 8:04 pm

மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் மீட்கப்பட்டுள்ள மண்டை ஓடுகள்,  எழும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களை பாதுகாப்பான இடத்தில் களஞ்சியப்படுத்தி வைக்குமாறு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும்  மன்னார்   நீதவான் ஆனந்தி கனகரட்னம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 43 மண்டை ஓடுகளும் 10 மனித எழும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன

இதேவேளை,   மனித புதைகுழி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு கொழும்பிலிருந்து மன்னாருக்கு சென்ற 06 பேர் கொண்ட குற்றப் புலனாயவு அதிகாரிகள் குழு  இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்