பிரதமர் அலுவலகத்தில் அமைதியின்மை; 12 பேர் கைது

பிரதமர் அலுவலகத்தில் அமைதியின்மை; 12 பேர் கைது

பிரதமர் அலுவலகத்தில் அமைதியின்மை; 12 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 7:08 pm

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் 12 பேர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளனர்.

சரணடைந்தவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி பிரதமர் அலுவலகத்திறக்குள் அனுமதியின்றி பிரவேசித்தமை, அமைதியயற்ற முறையில் செயற்பட்டமை, அநாவசிய ஒன்றுகூடல், பொது உடமைகளுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள்மீது  சுமத்தப்பட்டுள்ளன.

சரணடைந்த 12 பேரையும் கைது செய்த கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்