விளையாட்டு உபகரணங்களை கையாள்வது தொடர்பான புதிய ஆலோசனை…

விளையாட்டு உபகரணங்களை கையாள்வது தொடர்பான புதிய ஆலோசனை…

விளையாட்டு உபகரணங்களை கையாள்வது தொடர்பான புதிய ஆலோசனை…

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 10:47 am

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் விளையாட்டு உபகரணங்களை கையாளுதல் மற்றும் களஞ்சியப்படுத்தல் தொடர்பில் புதிய ஆலோசனைகள் அடங்கிய பத்திரமொன்றை இன்று முதல் வெளியிடுவதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

சகல அதிபர்களுக்கும் இந்த ஆலோசனைகள் அடங்கியபத்திரத்தை தபால் மூலம் அனுப்பி வைக்கவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவர் ரோலர் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தமை மற்றும் எம்பிலிப்பிட்டியவில் பாடசாலை மாணவன் ஒருவன் ஈட்டி எறிந்த சந்தர்ப்பத்தில் காயங்களுக்குள்ளானமை ஆகிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆலோசனை பத்திரத்தை வெளியிட கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

விளையாட்டு உபகரணங்களை கையாளுதல் மற்றும் அவற்றை எவ்வாறு பேணுவது போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த  பத்திரத்தில் ஆலோசனைகள்  உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் வெளியிட்ட ஆலோசனைகளை அடிப்படையாககக் கொண்டு புதிய ஆலோசனைகள் அடங்கிய பத்திரம்  தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்