தெற்கு அதிவேக வீதியில் விபத்து; இளைஞன் பலி

தெற்கு அதிவேக வீதியில் விபத்து; இளைஞன் பலி

தெற்கு அதிவேக வீதியில் விபத்து; இளைஞன் பலி

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 9:36 am

தெற்கு அதிவேக மார்க்கத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தெற்கு அதிவேக மார்க்கத்தின் குருந்துகஹ ஹெதம்ம நுழைவு வாயிலில் மோட்டார் சைக்கிளொன்று பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 வயதான இளைஞன் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்