தி.மு.கவில் இருந்து மு.க.அழகிரி நீக்கம்

தி.மு.கவில் இருந்து மு.க.அழகிரி நீக்கம்

தி.மு.கவில் இருந்து மு.க.அழகிரி நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 1:06 pm

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

மு.. அழகிரி இனியும் தொடர்ந்து கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும், அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும், அவர், தி.மு.கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக கட்சித் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராயப் பேதங்கள், கோபதாபங்கள் இவைகளைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் இருக்கின்றன.

கட்சி தொண்டர்களை தவறாக வழிநடத்த முயற்சித்தமை மற்றும் வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு மு.. அழகிரி தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்