தங்கம் கடத்த முயன்றவர் கைது

தங்கம் கடத்த முயன்றவர் கைது

தங்கம் கடத்த முயன்றவர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 10:46 am

வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக 4 தங்க கட்டிகளை கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை நோக்கிப் பயணிப்பதற்காக காத்திருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபரிடமிருந்த சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான 664 கிராம் நிறையுடைய 4  தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தங்கக் கட்டிகளை அரச உடைமையாக்கப்பட்டதுடன், சந்தேகநபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்