குங்குமப்பூ: அறிந்ததும் அறியாததும் (படங்களுடன்)

குங்குமப்பூ: அறிந்ததும் அறியாததும் (படங்களுடன்)

குங்குமப்பூ: அறிந்ததும் அறியாததும் (படங்களுடன்)

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2014 | 5:29 pm

இந்தியாவின் காஷ்மீர் பகுதி உயர் ரக குங்குமப்பூ விளைச்சலுக்கு பிரபலமானது.

உலகிலேயே மிகவும் விலைகூடிய நறுமணம் வீசும் இந்தக் குங்குமப்பூ எவ்வாறு பயிராகி அறுவடை செய்யப்படுகிறது என்பது குறித்து நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வர்த்தக ரீதியாக குங்குமப்பூ இந்தியா, ஸ்பெயின் மற்றும் ஈரானில் பயிரிடப்படுகிறது.

ஆனால், காஷ்மீரியில் பயிராகும் குங்குமப்பூவே மிகவும் விலையுயர்ந்தது.

bcc 07

குங்குமப்பூ முதலில் கிரேக்கத்தில் பயிரிடப்பட்டாலும், காஷ்மீரில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக விளைவிக்கப்படுகிறது.

பனி படர்ந்த மலையழகைக் காண காஷ்மீர் வரும்  சுற்றுலாப் பயணிகள் ஊதா நிறத்தில் நறுமணத்துடன் பூக்கும் குங்குமப்பூக்களைக் கண்டுகளிக்காமல் செல்வதில்லை.

காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரிலிருந்து சுமார் அரைமணி நேரப் பயணத்திலுள்ளது சிறிய நகரான பாம்போரில் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது.

 

bbc02

காஷ்மீரின் குங்குமப்பூ நகர் என்று இந்நகரம் அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

ஊதாநிறமான அந்தப் பூவிலிருந்து பயன்பாட்டிற்காக அதன் நடுவிலுள்ள மெல்லிய நூல்போன்ற இழை பிரித்தெடுக்கப்படுகிறது.

bbc 03

உணவு மற்றும் இதர தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் குங்குமப்பூ இழைகளை சேகரிக்க 75,000 க்கும் அதிகமான பூக்கள் தேவைப்படுகின்றன.

க்ரோகஸ் என்று அழைக்கப்படும் இந்தப் பூக்கள்  காஷ்மீர் பகுதியில் உணவு மற்றும் மருந்துகளில் பாரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

குங்குமப்பூவிற்கு ஆண்களின் வீரியத்தை அதிகரிக்கும் தன்மை உண்டு எனவும் சிலர் நம்புகிறார்கள்.

குங்குமப்பூ சந்தையில் மலிவாகக் கிடைக்கும் ஒரு பொருளல்ல. நன்கு காயவைக்கப்பட்ட ஒரு கிலோ குங்குமப்பூ சந்தையில் சுமார் மூவாயிரம் டொலர்களுக்கு விற்கப்படுகிறது ( சுமார் 180,000 இந்திய ரூபாய்)

bbc 04

காஷ்மீரில் மிகவும் பிரபலமாக இருக்கும், நறுமணம் வீசும் கேவா எனும் ஒருவகைத் தேநீர் தயாரிப்பில் குங்குமப்பூ முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

அந்த வகை தேநீருக்கு வண்ணம் சேர்ப்பதற்கும் குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது.

கறுவாப்பட்டை(சினமன்), ஏலம் மற்றும் குங்குமப்பூ உட்பட பல நறுமணப் பொருட்களை கொதிக்க வைத்து கேவா தேநீர் தயாரிக்கப்படுகிறது.

பின்னர் தேன் மற்றும் பாதாம் துருவல்கள் தூவப்பட்டு புத்துணர்ச்சியூட்டும் ஒரு பானமாகப் பரிமாறப்படுகிறது.

bbc 05

படங்கள்: பி.பி.சி.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்