இலங்கைப் பணிப்பெண் குவைத்தில் உயிரிழப்பு; விசாரணைகள் ஆரம்பம்

இலங்கைப் பணிப்பெண் குவைத்தில் உயிரிழப்பு; விசாரணைகள் ஆரம்பம்

இலங்கைப் பணிப்பெண் குவைத்தில் உயிரிழப்பு; விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 9:27 am

குவைத்தில் இலங்கை பணிப்பெண் ஒருவர் மின் விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் குவைத் தூதரகம் ஆகியன விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

குறிப்பிட்ட பெண் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 2009 ஆம் ஆண்டு வெளிநாடு சென்றுள்ளமை தொடர்பிலான தகவல்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த இலங்கை பணிப்பெண் நேற்று  உயிரிழந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும்  குறிப்பிடுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்