இரணைமடு குளத்திலிருந்து யாழுக்கு நீரை கொண்டு செல்வது தொடர்பில் பேச்சுவார்த்தை

இரணைமடு குளத்திலிருந்து யாழுக்கு நீரை கொண்டு செல்வது தொடர்பில் பேச்சுவார்த்தை

இரணைமடு குளத்திலிருந்து யாழுக்கு நீரை கொண்டு செல்வது தொடர்பில் பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 7:42 pm

கிளிநொச்சி இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை விநியோகிக்கும் திட்டம் தொடர்பிலான மற்றுமொரு கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை விநியோகிக்கும் திட்டத்திற்கு இதன்போது விவசாயிகள் தமது எதிர்ப்பினை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த திட்டம் தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் இன்று அறிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்