இந்த ஆண்டு கமல்ஹாசனின் 3 திரைப்படங்கள்

இந்த ஆண்டு கமல்ஹாசனின் 3 திரைப்படங்கள்

இந்த ஆண்டு கமல்ஹாசனின் 3 திரைப்படங்கள்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 12:50 pm

உலகநாயகன் கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு கொண்டாட்டமான ஆண்டாக அமையவுள்ளது.

இந்த வருடத்தில் கமல்ஹாசனின் 3 திரைப்படங்கள் வெளிவர இருப்பதாக இந்திய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“விஸ்வரூபம் 2” திரைப்பபடம் வரும் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உலகநாயகன் கமலஹாசனின் அடுத்த திரைப்பட இயக்குனர் ரமேஷ் அரவிந்த் ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தை ஆரம்பிக்க தயார் நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

படப்பிடிப்புக்கான அத்தனை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் கமல்ஹாசன் வந்ததும் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்துக்கு தேவையான முழு வசனங்களையும் கிரேசி மோகன் எழுதி முடித்துவிட்டதாகவும், கமல் ஒரு தடவை சரிபார்த்தவுடன் அவை இறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. உத்தமவில்லன் படத்தை மூன்றே மாதங்களில் முடித்துவிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இந்த படம் 2014ஆம் வருடத்தில் ஜூன் அல்லது ஜூலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு மலையாள படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். அந்த படத்தின் வேடம் இதுவரை தான் ஏற்காத பாத்திரம் என்பதால் அதில் நடிக்க அவர் விருப்பம் தெரிவித்து உள்ளாராம்.

இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனினும் இந்த படத்தில் கமல் நடிப்பது உறுதியானால் இந்த 2014ஆம் வருடத்தில் கமல்ஹாசனின் 3 படங்கள் வெளியாக உள்ளது என உலகநாயகன் ரசிகர்கள் உற்சாகத்தோடு கூறுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்