ஆலயங்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தி யாழில் வாகனத் தொடரணி…

ஆலயங்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தி யாழில் வாகனத் தொடரணி…

ஆலயங்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தி யாழில் வாகனத் தொடரணி…

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 7:20 pm

ஆலயங்களின் புனித தன்மையை பாதுகாக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று வாகனத் தொடரணி நடத்தப்பட்டுள்ளது.

இந்து குருமார்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த வாகனத் தொடரணிக்கு ‘ஓம் நமச்சிவாய ஆன்மீக வாகன ஊர்வலம்’ எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

சாவகச்சேரி, வேலணை, சுன்னாகம் மற்றும்  சித்தங்கேணி ஆகிய இடங்களிலிருந்து வாகன ஊர்வலங்கள் யாழ்ப்பாணம் வண்ணார்பன்ணை வைத்திஸ்வரன் ஆலயத்தை இன்று முற்பகல் வந்தடைந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதையடுத்து வைத்திஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை அடுத்து, இன்று முற்பகல் 11 மணியளவில் காங்கேசன்துறை வீதியூடாக கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் வரை வாகனத் தொடரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது

இந்தப் பேரணியின்போது பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஓம் நமச்சிவாய பிரசுரங்கள் கீரிமலையில் விசேட பூஜைகளுக்கு  வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்