அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்; இறுதிப் போட்டிக்கு வவ்ரிங்கா தகுதி

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்; இறுதிப் போட்டிக்கு வவ்ரிங்கா தகுதி

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்; இறுதிப் போட்டிக்கு வவ்ரிங்கா தகுதி

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 4:35 pm

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு சுவிட்ஸர்லாந்தின் முன்னணி வீரர் ஸ்டானிலஸ் வவ்ரிங்கா தகுதி பெற்றுள்ளார்.

மெல்பேனில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசின் தோமஸ் பேடிஸ்சை 3-1 என்ற செட் கணக்கில் வவ்ரிங்கா வெற்றிகொண்டார்.

இதன்மூலம் கிரான்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக வவ்ரிங்கா முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை எனவும், இது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் போட்டியின் பின்னர் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மற்றுமொரு சுவிட்ஸர்லாந்து வீரரான ரொஜர் பெடரர், இன்றைய தினம் ரபெயல் நடாலை எதி்கொள்ளவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்